காலிமுகத்திடலை நோக்கி நடைபயணத்தை ஆரம்பித்த மணிவேல் சத்தியசீலன் !
உடபுசல்லாவை சேர்ந்த மரதன் ஓட்ட வீரரான மணிவேல் சத்தியசீலன் இன்று காலை 09.30 மணியளவில் இராகலையில் இருந்து கொழும்பு காலிமுகத்திடலை நோக்கி நடைபயணத்தினை ஆரம்பித்துள்ளார்.
அவர், நாட்டில் தற்போது நிலவி வரும் பிரச்சினைகளுக்கு அரசு உடனடியாகத் தீர்வு வழங்க வேண்டும் , உரப்பிரச்சினை, பொருளாதாரப் பிரச்சினை, எரிவாயு மற்றும் பொருட்களின் விலை உயர்வு போன்ற பிரச்சினைகளுக்கு அரசு தீர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அதன்படி இராகலையில் மத வழிபாடுகளின் பின்னர் நுவரெலியா, ஹட்டன் , கினிகத்தனை , அவிசாவளை வழியாக கொழும்பு காலிமுகத்திடலை நோக்கி நடைபயணத்தினை ஆரம்பித்துள்ளார்.
இவ் நடைபயணத்தை மேற்கொண்டுள்ள சத்தியசீலனை மக்கள் உற்சாகப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

