போதைப்பொருள் கொடுத்து கூட்டாக பலாத்காரம் செய்யப்பட்ட பேராசிரியை ; இளைஞர்களின் செயலால் பெரும் அதிர்ச்சி
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரோஸ் (வயது 28). இவரது நண்பர் கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த மார்டின் ஆண்டனி (27). இவர்களுக்கு ஒரு நிகழ்ச்சி மூலம் கல்லூரி பேராசிரியை அறிமுகம் ஆனார்.
இந்தநிலையில் பிரோஸ், மார்டின் ஆண்டனி ஆகிய 2 பேரும் பேராசிரியையை கொச்சிக்கு வரவழைத்து, எம்.டி.எம்.ஏ. என்ற உயர்ரக போதைப்பொருள், கஞ்சா ஆகியவற்றை வலுக்கட்டாயமாக கொடுத்து உள்ளதாக தெரிகிறது.
மருத்துவ பரிசோதனை
பின்னர் அவர் மயக்கம் அடைந்த நிலையில் பேராசிரியையை களமச்சேரி, நெடும்பாசேரி ஆகிய இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கல்லூரி பேராசிரியை களமச்சேரி பொலிஸில் புகார் கொடுத்த புகாரின் பேரில் பொலிஸார் விசாரணை நடத்தினர்.
இதில் ஒரு கொண்டாட்ட நிகழ்ச்சியில் அறிமுகமான பேராசிரியையை கொச்சிக்கு வரவழைத்து, போதைப்பொருள் கொடுத்து பிரோஸ், மார்டின் ஆண்டனி ஆகிய 2 பேர் மயங்க வைத்து உள்ளனர்.
பின்னர் அவரை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் பொலிஸார் கைது செய்தனர்.
மேலும் பாதிக்கப்பட்ட பேராசிரியை மருத்துவ பரிசோதனைக்காக களமச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.