சீமானை செம டென்ஷனாக்கிய ரிங் டோன்!
நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் கிடைத்திருப்பதை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது ஒலித்த “மாமனாருக்கு ரத்த கொதிப்பு” பாடலின் ரிங்டோன் சீமான் உள்ளிட்ட நிர்வாகிகளை கடும் கோபமடைய வைத்தது.
நாம் தமிழர் கட்சிக்கு முதலில் இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் கொடுக்கப்பட்டது. பின்னர் அடுத்தடுத்த தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது.
எங்க மாமனாருக்கு ரத்த கொதிப்பு
இதனையே நாம் தமிழர் கட்சியினர் தங்களது நிரந்தர சின்னமாகவும் கருதி வந்தனர். எனினும் தற்போதைய மக்களவைத் தேர்தலில் திடீரென கரும்பு விவசாயி சின்னம் கர்நாடகாவில் உள்ள அரசியல் கட்சி ஒன்றுக்கு ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடையும் நிலையில் சின்னத்தை பெற்றாக வேண்டிய கட்டாயமும் நாம் தமிழர் கட்சிக்கு ஏற்பட்டது. தங்களுக்கு மைக் சின்னம் கிடைத்திருப்பதை சீமான் இன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் அறிவித்தார்.
அப்போது நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையையும் சீமான் வெளியிட்டார்.
அதாவது சீமான் மைக் சின்னத்தை அறிமுகப்படுத்தி பேசத் தொடங்கியபோது சீமானுக்கு பின்னால் நின்றிருந்த ஒருவரின் செல்போன் ரிங் டோன், ரத்த கொதிப்பு எங்க மாமனாருக்கு ரத்த கொதிப்பு என்ற பாடல் அலறியது.
இதனையடுத்து சிறிது நேரம் பேச்சை நிறுத்தி சீமான் முறைத்து பார்த்தார். உடனடியாக ‘ரத்த கொதிப்பு’ பாடல் ரிங்டோனாக வைத்திருந்த நபர் அங்கிருந்து வேகமாகவே வெளியேறியும் விட்டார் இந்த நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் நடந்த இந்த சம்பவம் சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினரை கொதிக்க வைத்துவிட்டது.