இலங்கை திறைசேரியில் திருடப்பட்ட பணம்; சைபர் பாதுகாப்பு நிபுணர் எச்சரிக்கை

Cyber Attack Australia Ministry of Finance Sri Lanka NPP Government
By Sulokshi Apr 25, 2026 07:13 AM GMT
Report

   இலங்கை திறைசேரியின் ஊடாக செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, ஹேக்கர்களின் கைக்குச் சென்றமையானது 'BEC' எனப்படும் நவீன சைபர் தாக்குதல் முறையினாலேயே இடம்பெற்றுள்ளதாக சைபர் பாதுகாப்பு நிபுணர் அசேல வைத்தியலங்கார தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பாரிய நிதி மோசடிகளைத் தடுப்பதற்கான தொழில்நுட்பக் கட்டமைப்புகள் இலங்கையில் உள்ள போதிலும், அவற்றை முறையாகப் பயன்படுத்தாததே இத்தகைய இழப்புகளுக்குக் காரணம் எனவும் சைபர் பாதுகாப்பு நிபுணர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை திறைசேரியில் திருடப்பட்ட பணம்; சைபர் பாதுகாப்பு நிபுணர் எச்சரிக்கை | Money Stolen From Sri Lanka S Treasury

 மின்னஞ்சல் தொடர்புகளுக்குள் ஊடுருவும்  ஹேக்கர்கள்

இந்த மோசடி குறித்துசைபர் பாதுகாப்பு நிபுணர் மேலும் விளக்குகையில்,

"தற்போது பரவலாகக் காணப்படும் 'Business Email Compromise' (BEC) எனும் முறையையே ஹேக்கர்கள் இங்கு பயன்படுத்தியுள்ளனர்.

கிளிநொச்சி மாணவியின் விபரீத முடிவால் துயரத்தில் உறவுகள்

கிளிநொச்சி மாணவியின் விபரீத முடிவால் துயரத்தில் உறவுகள்

உதாரணமாக, ஒரு நிறுவனம் மற்றுமொரு நிறுவனத்திற்கு மின்னஞ்சல் ஊடாக விலைப்பட்டியலை அனுப்பும் போது, ஹேக்கர்கள் அந்த மின்னஞ்சல் தொடர்புகளுக்குள் ஊடுருவி, வங்கி கணக்கு விபரங்களை மாற்றி அமைப்பார்கள்.

இதன் மூலம் அனுப்பப்படும் பணம் உரிய நிறுவனத்திற்குச் செல்லாமல் ஹேக்கர்களின் கணக்கிற்குச் சென்றுவிடும்" என்றார்.

நிதி அமைச்சின் கீழ் இயங்கும் ஒரு முக்கிய கிளையில் இவ்வாறானதொரு பரிவர்த்தனை எவ்வாறு இடம்பெற்றது என்பது கேள்வியாக உள்ளது.

மின்னஞ்சல் பரிமாற்றக் கட்டமைப்புகள் அண்மைக்கால தொழில்நுட்பத்திற்கு அமைய இற்றைப்படுத்தப்பட்டுள்ளனவா , அவற்றுக்கான பாதுகாப்பு மென்பொருட்கள் இடப்பட்டுள்ளனவா மற்றும் அவற்றை நிர்வகிப்பது யார் என்பது குறித்த கட்டமைப்பு ரீதியான சிக்கல்கள் அங்கு காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இலங்கையில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவோருக்கு வெளியான முக்கிய தகவல்

இலங்கையில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவோருக்கு வெளியான முக்கிய தகவல்

இலங்கை மத்திய வங்கி, நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும் 'ISO 27001' எனும் சைபர் பாதுகாப்பு தரச்சான்றிதழைப் பெறுவதைக் கட்டாயமாக்கியுள்ளது. இதன் காரணமாகவே வங்கித் துறையில் சைபர் தாக்குதல்கள் பெருமளவு குறைந்துள்ளன.

"இந்தத் தரச்சான்றிதழைப் பெறுவதால் மட்டும் ஹேக்கிங்கை முழுமையாகத் தடுத்துவிட முடியாது. ஆனால், அதற்கான பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் மற்றும் வருடாந்த வெளிப்புறத் தணிக்கைகள் மூலம் பாதிப்புகளைக் குறைந்தபட்ச நிலைக்குக் கொண்டு வர முடியும்" என அவர் விளக்கினார்.

வீட்டுத் தோட்டத்தில் பிஸ்டல் மீட்பு; பொலிஸாரின் சந்தேகம்

வீட்டுத் தோட்டத்தில் பிஸ்டல் மீட்பு; பொலிஸாரின் சந்தேகம்

நாட்டின் வங்கி முறைமையை விடவும் அதிக நிதிப் பொறுப்புகளைக் கொண்ட திறைசேரி போன்ற நிறுவனங்கள், வங்கிகள் பின்பற்றும் இத்தகைய பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை முறையாகப் பின்பற்றியிருந்தால், இந்த 2.5 மில்லியன் டொலர் இழப்பைத் தவிர்த்திருக்கலாம் எனவும் சைபர் பாதுகாப்பு நிபுணர் அசேல வைத்தியலங்கார சுட்டிக்காட்டினார்

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US