எரிபொருளுக்கான வரிசை குறைந்தது!
நுவரெலியா மாவட்டத்தின் சகல நகரங்களிலும் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு தேவையான டீசல் மற்றம் பெட்ரோல் என்பன போதியளவு கிடைத்து வருவதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
சிபெட்கோ மற்றும் ஐ.ஓ.சி ஆகிய நிறுவனங்களுக்குரிய எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு இவ்வாறு எரிபொருள் வழங்ப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் நுகர்வோருக்கு தேவையான எரிபொருள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் தடையின்றி விநியோகிக்கப்பட்டாலும் எரிபொருள் விலை அதிகரிப்பால் விற்பனையில் சிறிதளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதேவேளை முன்னரைப் போன்று வரிசைகளில் காத்திருக்காமல் மக்கள் தமக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதாகவும் வாகன சாரதிகள் தெரிவித்துள்ளனர்.