லசந்த விக்கிரம சேகர துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ; அரசியல் உண்மைகளை வெளிக்கொணர கோரிக்கை
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர துப்பாக்கிச் சூட்டுக்கு இழக்காகி உயிரிழந்த சம்பவம் குறித்து சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணைகளை நடத்தக் கோரும் தீர்மானத்தை இன்று கூடிய ஐக்கிய மக்கள் சக்தியின் நிர்வாகக் குழு அங்கீகரித்தது.
இந்த சம்பவத்தை ஒரு அரசியல் கொலையாக தனது கட்சி கருதுவதாகவும், இது குறித்து சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுக்க தீர்மானித்துள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பணியாற்றுவதற்காக வரையப்பட்ட ஒரு பொறிமுறை குறித்த விவாதத்தை தற்போதைக்கு ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதுடன், குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.