மக்களுக்கு குஷியை ஏற்படுத்திய தங்கத்தின் விலை!
கொழும்பு - செட்டியார்தெரு நிலவரங்களின் படி ஜுன் மாத முதலாம் திகதியான இன்றும் (01.06.2023) ஆபரண தங்கத்தின் விலை 150,000 ரூபாவை விட குறைவடைந்தே காணப்படுகிறது.
அதன்படி இன்றைய தினம் 22 கரட் ஆபரண தங்கப் பவுணொன்றின் விலையானது 147,000 ரூபாவாக பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 159,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதன்போது நேற்றைய தினம் கொழும்பு செட்டியார்தெரு நிலவரத்தின் அடிப்படையில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 149,000 ரூபாவாக பதிவாகியிருந்தது.
அதேநேரம் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 161,000 ரூபாவாக பதிவு செய்யப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
மேலும் ஆபரண தங்கத்தின் விலையானது கடந்த சில கிழமைகளுக்கு முன் 160,000 ரூபாவிற்கும் அதிகமாகவிருந்த நிலையில் கடந்த சில நாட்களாக வீழ்ச்சி பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.