ஜனாதிபதிக்கு மூளை சரியில்லை; எம்.பி ஆவேசம்!

Parliament of Sri Lanka Gotabaya Rajapaksa Sri Lanka Politician Sri Lanka Economic Crisis
By Sundaresan Jul 03, 2022 05:10 PM GMT
Sundaresan

Sundaresan

Report

மக்கள் இன்று வீடுகளிலேயே செத்து மடிகிறார்கள். இன்னும் இரண்டு வருடங்கள் உள்ளன, பல்லாயிரக்கணக்கான மக்கள் உணவு இல்லாமல் வரிசையில் இறப்பார்களோ தெரியாது.

ஜனாதிபதி பொறுப்பற்று செயற்பட்ட வண்ணமுள்ளார் அவருக்கு மூளை சரியில்லை“ என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே மேற்குறிப்பிட்ட விடயங்களை அவர் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது அரசாங்கம் 22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை சமர்ப்பித்துள்ளது.

21ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் கொண்டு வரப்பட்ட சர்வாதிகார ஆட்சியை அகற்றிவிட்டு 19 ஆவது திருத்தத்தை மீண்டும் கொண்டு வருமாறு இந்நாட்டு மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஜனாதிபதிக்கு மூளை சரியில்லை; எம்.பி ஆவேசம்! | The President Is Mentally Ill Mp Obsession

இந்நாட்டு மக்கள் போராடிக் கொண்டிருக்கும் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, மே 11 ஆம் திகதி நாட்டு மக்களுக்கு உரையாற்றி 19 ஆம் திருத்தம் மீண்டும் கொண்டு வந்து நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்போம் என்று கூறினார்.

ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பதற்குப் பதிலாக 19 அதிகாரங்களுடன் ஒப்பிடும் போது அது அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரதமரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் 19 இல் இருக்கவில்லை, 22 இல் உண்டு.

பிரதமரை நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது மற்றும் பிரதமரின் அறிவுறுத்தலின் படி அமைச்சரவையை நியமிப்பது என்ற 19 இல் உள்ள ஏற்பாடு திருத்தப்பட்டுள்ளது.

19 இல் ஜனாதிபதிக்கு அமைச்சுப் பதவிகளை வகிக்க முடியாது என கூறப்பட்ட நிலையில், தற்போது 22 இல் ஜனாதிபதி அமைச்சுப் பதவிகளை வகிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஜனாதிபதி கடந்த மே 11 ஆம் திகதி நாட்டு மக்களுக்கு சொன்ன கதை பொய்யானது,மக்களை தினமும் ஏமாற்றி வருகின்றார்.

அது மாத்திரமன்றி அனைத்து சுயாதீன ஆணைக்குழுக்களும் செயற்படுகின்ற இடம் தான் அரசியலமைப்பு பேரவையாகும். கடந்த காலங்களில் அரசியலமைப்பு பேரவையில் பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதி மற்றும் பிரதமர் எதிர்க்கட்சித் தலைவர் போன்றோர் பரிந்துரைக்கும் ஏற்பாடு, நியமிப்பதில் இருந்தது. 19 இல் இதற்கான சமநிலை இருந்தது.

சபாநாயகர் நியமிப்பதற்கு பாராளுமன்றத்தின் அனுமதி பெற வேண்டும் என 22 இல் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது இந்த அரசாங்கத்தால் ஏழு பேரும் மற்ற எதிர்க்கட்சி குழுக்களுக்கு மூன்று பேருமே நியமிக்க முடியும். அப்படியானால் இந்த அரசாங்கமும் ஜனாதிபதியையும் விஜேதாச ராஜபக்சவும் இந்நாட்டு மக்களையும் ஏமாற்றி விட்டனர்.

விஜேதாஸ ராஜபக்ச, மகா சங்கத் தலைமை பீடங்களுக்கு சென்று பெரும் மத தலைவர்களுக்கு வழங்கியது அல்ல, வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. சங்கைக்குரிய மகா தேரர்களையும் இவர்கள் ஏமாற்றியுள்ளனர். ஜனாதிபதி தனது அதிகாரத்தை தனது கைகளில் தொடர்ந்து வைத்துள்ளார். இந்த ஜனாதிபதி இன்று மக்களையும் மகாநாயக்க தேரர்களையும் ஏமாற்றி வருகின்றார்.

அதனால் தான் சர்வ கட்சி அரசாங்கத்தை கொண்டு வருவதற்கு நான்கு மகா பிரிவிவேனாக்களைச் சேர்ந்த வணக்கத்துக்குரிய மகா சங்கத்தினர் முன்வந்துள்ளனர். அதாவது கோட்டா – ரணிலின் அரசாங்கத்தை மகாநாயக்கர் நிராகரித்துள்ளார்கள். கோட்டா – ரணில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது என்பதையே மகாநாயக்க தேரர்கள் கூற வருகின்றனர்.

அதனால்தான் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக சர்வ கட்சி ஆட்சி அமைக்கும் அறிவிப்பை மகாநாயக்க தேரர்கள் அறிக்கையாக நேற்றுமுன்தினம் வெளியிட்டிருந்தனர். ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு இந்த வேளையில் நாட்டைக் காப்பாற்ற சர்வ கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு மகாநாயக்க தேரர்கள் மற்றும் பிக்குகள் முன்வைத்த முன்மொழிவிற்கு எமது உடன்பாட்டைத் தெரிவிக்கிறோம்.

இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத கருத்திற் கொள்ளாத அரசாங்கமாக இருக்கிறது, வரிசையில் நின்று செத்து மடியும் காலம் வந்துவிட்டது, எண்ணெய் வரிசையில் இருந்த இருபதுக்கும் மேற்பட்டோர் இன்று இறந்திருக்கிறார்கள், அதற்கு இந்த அரசாங்கம் தான் காரணம். அரசாங்கத்தின் தவறே இது. மேலும், எரிவாயு சிலிண்டர்கள வெடித்து, ஏராளமான மக்கள் எரிவாயு வரிசையில் இறந்தனர், கோவிட் தொற்றுநோயால், பதினேழாயிரம் பேர் இறந்ததை நாங்கள் உங்களுக்கு நினைவூட்டுகிறோம், ஏனெனில் அவர்கள் சரியான நேரத்தில் தடுப்பூசி போடாததாலும், தேவைப்படும் போது நாடு முடக்கப்படாமலும் இருந்தது.

முகக்கவசம் அணியுமாறு கூறப்படவில்லை. இதற்கெல்லாம் கோட்டாபய ராஜபக்சவும் அரசாங்கமும் தான் பொறுப்பேற்க வேண்டும். இப்போது ஒரு மணித்தியாலத்திற்கு 4 பேர் இந்த அழுத்தத்தினால் மரணமடைவதாக ஒரு வைத்தியர் கூறுகிறார். மாரடைப்பால் ஏற்படும் மரணங்கள் குறித்து அரசாங்கம் ஒன்றும் தெரியாதது போல் பார்த்துக் கொண்டிருக்கிறது.

இன்று மக்கள் வீடுகளிலேயே செத்து மடிகிறார்கள். கோட்டாபய ராஜபக்ஷவின் மூளை சரியில்லை. இப்போது இன்னும் இரண்டு வருடங்கள் உள்ளன, பல்லாயிரக்கணக்கான மக்கள் உணவு இல்லாமல் வரிசையில் இறப்பார்களோ தெரியாது. பொறுப்பற்று செயற்பட்ட வண்ணமுள்ளார் ஜனாதிபதி. இராஜினாமா செய்யாமல் அமைச்சரவையை நீக்கிவிட்டு அதன்பின் தற்காலிக அமைச்சரவையை நியமித்து ரணில் விக்கிரமசிங்கவை வைத்து வேறு கூடாரம் போட்டார்.

அண்மையில் அந்த அமைச்சரவையில் தம்மிக்க பெரேரா என்ற வர்த்தகர் இடம் பெற்றுள்ளார். இந்த அரசாங்கம் வரிச்சலுகை வழங்கியதால், கையிருப்பில் இருந்து பணத்தை எடுக்க வேண்டியதாயிற்று, இந்த வரிச்சலுகைகளால், நாட்டின் பொருளாதாரம் சரிந்தது. வரிச் சலுகைகள் மூலம் ஆண்டுக்கு சுமார் 700 மில்லியன் தேசிய வருமானத்திற்கு இழப்பு ஏற்பட்டது. இந்த வரிச்சலுகைகளில் ஏறக்குறைய மூன்று ஆண்டுகளில் 3,000 மில்லியன் வரிச் சலுகையை தம்மிக்க பெரேராவே பெற்றுள்ளார் என்று நான் கூறுகிறேன்.

இன்று நாட்டு மக்களிடம் பாவனைக்கேற்ற போதிய எண்ணெய் இல்லை, பொருட்களின் விலை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது, ஆனால் இதையெல்லாம் மக்களே அநுபவிக்க நேரிட்டுள்ளது. ஊடகங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதை, ஊடகங்களை ஒடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. ஊடகவியலாளர்களுக்கு எரிபொருள் வழங்கப்படுவதில்லை.

ஊடக சுதந்திரம் மறைமுகமாக நசுக்கப்படுவது ஏன்? பெருந்தொகையான சமூக ஊடக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை நாம் அறிந்ததே. மேலும், சமூக ஊடகங்களை முடக்க அரசாங்கம் தலையிட்டால் அதற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி போராடுவது மட்டுமன்றி சட்ட நடவடிக்கைகளை எடுப்பதோடு கைது செய்யப்படும் பட்சத்தில் உரிய சட்ட உதவிகளையும் வழங்க தயாராகவுள்ளோம் எனவும் தெரிவித்தார்.

மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

மதவுவைத்தகுளம், பாவற்குளம், கரம்பைமடு

16 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, Ivry-sur-Seine, France, புங்குடுதீவு 1ம் வட்டாரம்

12 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US