யாழில் மதுபோதையில் அட்டகாசம் செய்த பொலிஸ் அதிரடியாக பணி நீக்கம்!
யாழ்ப்பாணத்தில் மதுபோதையில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பொதுமகனை தாக்கிய நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
லஞ்சம் கேட்டு தாக்குதல்
ஊர்காவற்துறை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்றுமுன்தினம் (24) இரவு மது போதையில், குறிகட்டுவான் பகுதியில் கடமையில் இருந்திருந்தார். இதன்போது, வீதியால் சென்ற பொதுமகனிடம் இலஞ்சம் பெற முயன்றதோடு அவர்மீது தாக்குதலும் மேற்கொண்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட நபர் இது குறித்து ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார். இதனையடுத்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தியிருந்தனர்.
இந்நிலையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை தலா ஒரு இலட்சம் பெறுமதியிலான இரண்டு ஆள் பிணைகளில் செல்வதற்கு அனுமதியளித்திருந்தார்.
அத்துடன் குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.