ஏற்றிச்செல்ல மறுத்ததால் பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கிய நபர்!
சைக்கிளில் ஏற்றிச்செல்ல மறுத்த பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கிய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதல் ஆடியகம பிரதேசத்தில் மோட்டார் நேற்று திங்கட்கிழமை (11) இடம்பெற்றுள்ளது. தாக்குதலுக்கு உள்ளானவர் குருணாகல் - ரஸ்நாயக்க பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தராவார்.
சிகிச்சைக்காக அனுமதி
இவர் கடமை முடிந்து வீடு சென்று கொண்டிருக்கும் போது வழியில் வந்த சந்தேக நபர் தன்னை மோட்டார் சைக்கிளில் ஏற்றி தான் போகும் வழியில் இறக்கிவிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
எனினும் பொலிஸ் உத்தியோகத்தர் மோட்டார் சைக்கிளில் ஏற்றிச்செல்ல மறுத்ததால் சந்தேக நபர் பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கியுள்ளார்.
காயமடைந்தவர் நிக்கவெரட்டிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.