மல்லாவியில் வாழும் வயோதிப தாயின் வலி சுமந்த கதை..!(காணொளி)
வறுமையை விட துன்பமானது என இவ்வுலகில் வேறு எதுவும் இல்லை என்பார்கள். நம் நாட்டில் அன்றாடம் வாழ்வதற்கு தேவையான அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்கு கூட வசதியற்ற நிலையில் மக்கள் அனைவருமே திண்டாடிக் கொண்டிருக்கின்றோம்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையால் மாதாந்த வருமானம் பெறாதசாதாரண கூலிவேலைக்கு செல்பவர்கள் தொடங்கி மாதாந்த வருமானம் பெறும் அரச ஊழியர்கள் வரை இன்று பெட்ரோலிற்கும் மண்ணெண்ணைக்கும் தெருவோரம் வரிசையில் காத்திருக்கின்றனர்.
அதுமட்டுமன்றி நாட்டில் பலரின் வீடுகளில் சமைப்பதற்கு எதுவும் இன்றி தவித்து வருகின்ற சூழலில் நாம் இருக்க யாரும் இன்றி தனியே வாழும் வயோதிப தாய்மாரின் துயர நிலை என்னவாக இருக்கும்.
மல்லாவியில் இருக்கக்கூடிய மங்கைநகர் என்னும் கிராமத்தில் வாழும் வயோதிப தாயான ராமன் வேலாயி எனும் மூதாட்டியின் வறுமை நிறைந்த வாழ்க்கை கதையை சுமந்து வருகின்றது எமது உறவுப்பாலம் நிகழ்ச்சி.