தென்னிலங்கையை உலுக்கும் கொலைச்சம்பவங்கள்!
பாணந்துறை பின்வத்தை பிரதேசத்தில் இன்று காலை சொகுசு வாகனத்திற்குள் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட நபர் வர்த்தகர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை காலி வீதியில் இருந்து கடற்கரை வீதியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வர்த்தகர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேக நபர்கள் இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பொலிஸார் விசாரணை
துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து சந்தேகநபர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளனர். அதேவேளை பாதிக்கப்பட்டவர் சாரதி இருக்கையில் வாகனத்திற்குள் உயிர்ழந்ததாக கூறப்படுகிறது.
உயிரிழந்தவர் கடவத்தை, கிரல்லாவல பகுதியைச் சேர்ந்த 56 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பாணந்துறை பின்வத்த பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தனது வீட்டிற்குச் சென்றிருந்தபோதே குறித்த நபர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை பிடிக்க பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
அதேவேளை தென்னிலங்கையில் அண்மைகாலங்களில் கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.