சென்னையில் இருந்து 160 பயணிகளுடன் புறப்பட்ட விமானத்தில் கோளாறு
சென்னையில் இருந்து நேற்றிரவு 160 பயணிகளுடன் பெங்களூரு சென்ற இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதனால் விமானத்தில் பயணித்த பயணிகள் கடும் அச்சமடைந்துள்ளனர்.
சென்னையில் இருந்து நேற்றிரவு 160 பயணிகளுடன் பெங்களூருவுக்கு சென்ற இண்டிகோ விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது.
இயந்திர கோளாறை கண்டறிந்த விமானி
இதையடுத்து விமானம் மீண்டும் சென்னை விமான நிலையத்திற்கு திரும்பி வந்து அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது
விமான இயந்திர கோளாறை கண்டறிந்த விமானி எடுத்த துரித நடவடிக்கையால், ஏற்படவிருந்த ஆபத்து தடுக்கப்பட்டு 160 பயணிகளின் உயிர் பாதுகாக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பயணிகள் அனைவரும் மாற்று விமானம் மூலமாக பாதுகாப்பாக பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதேவேளை இந்தியாவில் சமீபகாலமாக விமானத்தில் அடுத்தடுத்து தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவது பயணியரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.