தமிழர் பகுதியில் தனியார் காணியில் வெடிக்காத நிலையில் செல் வெடிகுண்டு மீட்பு
இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தனியார் காணியொன்றில் வெடிக்காத நிலையில் செல் மீட்கப்பட்டுள்ளது.
1990 ஆண்டுக்கால பகுதியில் இராணுவத்தினால் ஏவப்பட்ட செல் ஒன்று இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இராமநாதபுரம் பகுதியில் தனியார் காணி உரிமையாளர் ஒருவரது காணியினை துப்பரவு பணி மேற்கொண்ட பொழுது வெடிக்காத நிலையில் செல் இனங்காணப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக இராமநாதபுரம் பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக இராமநாதபுரம் பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
அதனையடுத்து கிளிநொச்சி நீதிமன்ற நீதவானின் அனுமதியுடன் செயலிழக்க செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அப்பகுதியில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் இராமநாதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.