போலி திருமண ஆவணங்கள் ; லண்டன் கனவில் மண்ணை அள்ளிப்போட்ட பணத்தாசை
இந்தியா குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில், போலி திருமண மற்றும் விவாகரத்து ஆவணங்களைப் பயன்படுத்தி, ஒரு பெண் 'சார்ந்திருப்பவர் விசா' (Dependent Visa) மூலம் ஐக்கிய இராச்சியத்திற்கு (UK) செல்ல முயன்ற சட்டவிரோத குடியேற்றத் திட்டத்தைப் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
அதிர்ச்சியூட்டும் குடும்ப விவகாரம் ; யாழில் இருந்து கனடா சென்ற குடும்பஸ்தர் மனைவிக்கு நடத்திய கொடூரம்
இந்த மோசடியில் பெண்ணின் "கணவர்" என்று ஆவணங்களில் காட்டப்பட்ட நபருக்கும், பெண்ணின் குடும்பத்தாருக்கும் இடையே ஏற்பட்ட பணத் தகராறே இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வரக் காரணமாகியுள்ளது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சட்டவிரோத குடியேற்றத்திற்காகப் பேசப்பட்ட பணம் சரியாக வழங்கப்படாததால், அந்த நபர் காவல்துறையில் முறைப்பாடளித்துள்ளார்.
விசாரணையில், இந்த சட்டவிரோதத் திட்டம் 2024 பெப்ரவரி மாதம் அரங்கேறியது தெரியவந்துள்ளது.
லண்டனில் வசிக்கும் ஒருவர் தனது மனைவி எனக் காட்டி போலி திருமணச் சான்றிதழைத் தயாரித்துள்ளார்.
எனினும் பின்னராக ஏற்பட்ட பணத் தகராறு குறித்த மோசடியை அம்பலப்படுத்த உதவியாக அமைந்துள்ளது.