தொடர்ந்து 2 வாரம் முட்டை சாப்பிடுவதால் உடலுக்குள் என்னென்ன அற்புதங்கள் நடக்கும் தெரியுமா?
தினமும் ஒருவர் போதுமான புரோட்டீனை பெற்றால் தான் உடல் ஆரோக்கியமாகவும், உள்ளுறுப்புக்களின் செயல்பாடுகள் சிறப்பாகவும் இருக்கும். புரோட்டீன் பல்வேறு உணவுகளில் காணப்பட்டாலும், முட்டையில் தான் நல்ல தரமான புரோட்டீன் நிறைந்துள்ளது.
தினசரி உணவில் முட்டையை சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி நாம் இங்கு பார்ப்போம்.

கண்களுக்கு நல்லது
முட்டைகள் கண்களை பாதுகாக்கும் மற்றும் கண் தொடர்பான பிரச்சனைகளின் அபாயங்களைத் தடுக்கும் சத்துக்களைக் கொண்டது. "முட்டையை தினமும் உட்கொள்ளும் போது, அது மாகுலர் சிதைவு மற்றும் கண்புரை ஏற்படும் அபாயத்தைத் தடுக்க உதவுகின்றன

மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
மூளை மற்றும் கல்லீரலுக்கு நல்லது முட்டையில் கோலின் அதிகமாக உள்ளது. இது மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் இது கொழுப்பு கல்லீரல் நோய் வரும் அபாயத்தைத் தடுக்கிறது என்று டாக்டர் கூறினார். சமீப காலமாக கொழுப்பு கல்லீரல் நோயால் நிறைய பேர் பாதிக்கப்படுகின்றனர். இந்த கொழுப்பு கல்லீரல் நோய் வரக்கூடாதெனில், முட்டையை தினசரி உணவில் சேர்த்து வாருங்கள். அதோடு தற்போதைய பரபரப்பான வாழ்க்கை முறை ஒருவித மன அழுத்தத்தை ஏற்படுத்தி, மூளையின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. ஆனால் முட்டையை தினமும் உட்கொண்டு வரும் போது, அது அறிவாற்றல் செயல்பாடுகளுக்கு ஆதரவளிக்கிறது.

நல்ல கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்
நல்ல கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் முட்டை மற்றும் கொழுப்பு குறித்த சந்தேகங்கள் பலருக்கு உள்ளன. அதில் பெரும்பாலானோரின் மனதில் இருப்பது முட்டை கொழுப்புக்களை அதிகரிக்குமா என்பது தான். ஆனால் ஒருவரது உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கக்கூடாதெனில், நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க முயற்சிக்க வேண்டும். "முட்டையில் நல்ல கொலஸ்ட்ரால் அதிகம் நிறைந்துள்ளது. எனவே முட்டையை தினமும் உட்கொள்ளும் போது, அது நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க உதவும்"

சர்க்கரை அளவை சமநிலைப்படுத்த உதவும்
இரத்த சர்க்கரை கட்டுப்படும், ஆற்றல் அதிகரிக்கும் முட்டையை காலை உணவாக எடுக்கும் போது, அது இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது மற்றும் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்பட தேவையான ஆற்றலை வழங்குகிறது
