டி20 உலகக் கிண்ணம் ; அமெரிக்காவை வீழ்த்திய இந்திய அணி
ஐசிசி டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 3ஆவது போட்டியில் இந்திய அணி 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மும்பையில் நடைபெற்ற குறித்த போட்டியில் இந்திய மற்றும் அமெரிக்க அணிகள் மோதின. இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அமெரிக்க அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 161 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணியின் சார்பில் சூர்யகுமார் யாதவ் அதிகபட்சமாக 84 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
இந்தநிலையில் 162 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அமெரிக்க அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 132 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.
துடுப்பாட்டத்தில் அமெரிக்க அணியின் சார்பில் சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி மற்றும் சுபம் ரஞ்சனே ஆகியோர் அதிகபட்சமாக 37 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் இந்திய அணியின் சார்பில் அர்ஷ்தீப் சிங், மொஹமட் சிராஜ் மற்றும் அக்ஷார் பட்டெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.