யாழில் காத்திருந்த மக்களை ஏமாற்றிய அநுர அரசாங்கத்தின் அமைச்சர்
இன்று (09) சுழிபுரம் காட்டுப்புலம் மீனவர்களை காலை 10 மணியளவில் கடற்தொழிலாளர் மண்டபத்தில் ஒன்று கூடுமாறும் கடற்றொழில் அமைச்சர் உட்பட்ட குழு மூன்று வாகனங்களில் வருகை தருவதாகவும் பிரதேச கடற்றொழில் பரிசோதகர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடற்றொழிலாளர்கள் 10 மணியிலிருந்து 12:30 மணி வரை காத்திருந்துள்ளதுடன் மாலை 2: 00 மணியளவில் தாம் வருகை தரமாட்டோம் என தெரிவித்த நிலையில் அவர்கள் வீடு திரும்பியுள்ளனர்.
அமைச்சரின் வருகை
இதேவேளை சுழிபுரம் சவுக்கடி மீனவர்களையும் கடற்கரைக்கு வருகை தருமாறு கோரிய நிலையிலும் அமைச்சர் வருகை தராமையால் கடற்றொழிலாளர்கள் ஏமாற்றத்துடன் தமது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
வயது முதிர்ந்த சில முதியவர்களும் நீண்ட நேரம் காத்திருந்து சென்றிருந்தனர். பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தமது வாழ்வியலை நடாத்தி வரும் மீனவர்கள் மக்கள் பிரதிநிதி ஒருவருக்காக நீண்ட நேரம் காத்திருந்து திரும்பியுள்ளனர்.
இதேவேளை அரச துறைசார் கடற்றொழில் பரிசோதகரும் காலை முதல் தனது ஏனைய வேலைகளை விடுத்து அமைச்சரின் வருகைக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
இனிவரும் காலங்களிலாவது பொறுப்பு வாய்ந்த மக்கள் பிரதிநிதிகளாக செயற்பாடுவார்களா எனவும் தேர்தல் காலங்களிலேயே வருகிறதாக கூறி விட்டு வருகை தராத அமைச்சர் எதிர்காலங்களிலாவது எவ்வாறு வருகை தருவார் என்பதில் என்ன நிச்சயம் இருக்கின்றது என பிரதேசத்தவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.