கைகுண்டால் மனைவியை மிரட்டியவருக்கு விளக்கமறியல்
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூவரசன் தீவு பகுதியில் கைக்குண்டு வைத்திருந்த நபரை பொலிஸார் விளக்கமறியலில் வைத்துள்ளனர்.
29 வயதுடைய குறித்த நபர் முன்னாள் இராணுவ வீரர் என்றும் இலங்கை இராணுவத்தின் பொறியியல் பிரிவில் பணியாற்றி பிறகு முறையான அங்கீகாரத்துடன் இராணுவ சேவையிலிருந்து விலகியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கணவன் மனைவி இடையே குடும்பத்தகராறு ஏற்பட்ட நிலையில் முன்னாள் இராணுவ வீரரான கணவர் கைக்குண்டைக் காட்டி மனைவியை மிரட்டியுள்ளார் என என தெரியவந்துள்ளது .
மேலும் தகவல் கிடைக்கப்பெற்ற கிண்ணியா பொலிஸார் சந்தேக நபரைக் கைகுண்டுடன் கைது செய்து , திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.