ஜனாதிபதியை திடீரென சந்தித்த முக்கிய தமிழ் அமைப்பினர்!
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இருதய சத்திர சிகிச்சை பகுதி மற்றும் முடிவுறாத கட்டிடத் தொகுதியும் அதற்கான உயிர்காப்பு இயந்திர சாதனங்களும் இன்மையால் நோயாளிகள் சிகிச்சையின்றி பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
கடந்த சில வருடங்கள் தொட்டு மாவட்ட அரசியல்வாதிகள் பெரும் முயற்சி எடுத்து வந்தனர் காலம் கடந்தும் எதுவும் கைகூடாத நிலையில் நிலையில் உள்ளது.
அண்மையில் தனிப்பட்ட ரீதியாக மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் சந்தித்து இருந்தார்.
இதன்போது வைத்தியசாலையின் மேற்படி விடயம் தொடர்பான அவசியம் குறித்து போதனா வைத்தியசாலை வைத்திய பணிப்பாளருடன் இது சம்பந்தமான வைத்தியர்களையும் அழைத்துச் சென்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்க ஏற்பாடு செய்து கொடுத்தார் .
வைத்தியசாலை நிலைமைகளை விபரமாக கேட்டு அறிந்து கொண்ட ஜனாதிபதி இதற்கான நடவடிக்கையினை துரிதமாக மேற்கொண்டுள்ளார். இது விடயமாக மத்திய வங்கி ஆளுநருக்கு அவசர பணிப்புரை ஒன்றை ஜனாதிபதி விடுத்துள்ளார்.
இதேவேளை தமிழர் உணர்வாளர் அமைப்பின் தலைவரினால் மாவட்டத்தில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.