நாட்டின் செலவீனங்களை குறைக்க எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்
நாட்டின் செலவீனத்தைக் குறைக்க மூன்று வெளிநாட்டு தூதரகத்தை மூடுவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
நாட்டின் செலவினங்களைக் குறைப்பதற்கும் தேவையான அமெரிக்க டொலர்களை ஒதுக்கி வைப்பதற்குமான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இலங்கை மூன்று வெளிநாட்டு தூதரகங்களை மூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜெர்மனி மற்றும் சைப்ரஸில் உள்ள துணைத் தூதரகங்களை மூட வெளியுறவு அமைச்சகம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
அலுவலகங்களை நிர்வகிப்பதற்கான செலவைக் குறைக்க ஐரோப்பிய நாடுகளில் உள்ள இரண்டு துணைத் தூதரகங்களையும் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது. நைஜீரியாவில் உள்ள தூதரகத்தை மூடுவது பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக எடுக்கப்பட்ட முடிவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜேர்மனியின் பிராங்பேர்ட்டில் உள்ள துணைத் தூதரகத்தின் செயல்பாடுகள் பேர்லினுக்கு மாற்றப்படும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.