வடமாகாண கல்வித் திணைக்களத்தின் மெத்தனம்!
வடமாகாண கல்வித் திணைக்களத்தின் பதவி முத்திரை தலைகீழாக பொறிக்கப்பட்டு அனுப்பப்பட்ட சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்
வட மாகாண கல்வித் திணைக்களத்தின் மேலதிக மாகாண கல்வி பணிப்பாளரின் கையெழுத்துடன் அனுப்பப்பட்ட கடிதம் ஒன்றில் தலைகீழாக அவரது பதவி முத்திரை பொறிக்கப்பட்டு அனுப்பப்பட்டது.
தலைகீழான பதவி முத்திரை
கடிதத்தில் பதவி முத்திரையை பொறித்தவர் தலைகீழாக பெறிக்கப்பட்டுள்ளது என தெரிந்தும் கடிதத்தை புதிதாக வரையாமல் தலைகீழாக பொறிக்கப்பட்ட பதவி முத்திரைக்கு மேலாக மீண்டும் பதவி முத்திரை பொறிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.
அதேவேளை வடக்கு மாகாண கல்வி அமைச்சில் நிர்வாக முறைகேடுகள் இடம் பெறுவதாக பல்வேறு தரப்பினர்களும் குற்றச்சாட்டு முன்வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடிதத்துக்கு கூட ஒழுங்காக பதவி முத்திரை இடப்படாமை கல்வி அமைச்சு மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை ஆதாரப்படுத்துவதாக அமைகிறதாக பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.