ஒவ்வொரு ஆண்டும் ஒரு பெண்ணை திருமணம் செய்த மன்னர்!
ஒவ்வொரு ஆண்டும் ஒரு பெண்ணை ஆப்பிரிக்கா மன்னர் ஒருவர் திருமணம் செய்து கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் பல ஆண்டுகளுக்கு முன் மன்னர்கள்தான் நாட்டை ஆண்டு வந்தனர்.
ஆனால் தற்போது அப்படியில்லை. இந்த நவீன காலத்தில் மன்னர் ஆட்சியெல்லாம் முடிந்துவிட்டது. இருப்பினும் ஓரி சில நாடுகளில் இன்னும் மன்னர் ஆட்சிதான் நடந்துவருகின்றது.
ஆப்பிரிக்காவில் ஸ்வாசிலாந்து நாட்டில் தற்போதும் மன்னர் ஆட்சிதான் நடந்துவருகின்றது,
இந்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் விழா ஒன்று நடைபெறும். குறித்த விழாவில் திருமணமாகாத 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட பெண்கள் மன்னர் முன்னாள் நடனமாடுவார்கள். நடனமாடும் பெண்களில் ஒருவரை மன்னர் திருமணம் செய்து கொள்ளவர் என கூறப்படுகின்றது.
இதேவேளை 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்தியா - ஆப்பிரிக்கா உச்சி மாநாட்டில் குறித்த மன்னர் பங்கேற்றபோது தனது 15 மனைவிகளையும் மற்றும் 100 குழந்தைகளை அழைத்து வந்திருந்த தகவல் வெளியாகியுள்ளது.