கள்ளக்காதலியுடன் இருந்த இன்ஸ்பெக்டர்; இரகசியமாக கண்டுபிடித்த முதல் மனைவி!
வேறொரு பெண்ணுடன் ரகசிய தொடர்பில் இருந்த காவல் ஆய்வாளர் மனைவியிடம் கையும் களவுமாக சிக்கிய சம்பவம் ஆந்திராவில் நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில் நெல்லூரில் ஆயுதப்படை காவல் ஆய்வாளராக பணியாற்றுபவர் வாசு. அவருக்கும் 30 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று மகன், மகள் ஆகியோர் உள்ளனர்.
இந்நிலையில், 2017ல் மனைவி, பிள்ளைகளைக் கைவிட்ட வாசு அடுத்த ஆண்டே வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
ஆனால் சமீபகாலமாக நெல்லூரில் போஸ்டல் காலனியில் வசிக்கும் பெண் ஒருவருடன் வாசு ரகசிய தொடர்பில் இருந்து வந்துள்ளதாக தெரிகிறது.
தன்னையும், தன் பிள்ளைகளையும் விட்டுச் சென்ற தன் கணவன் மீது கடுங்கோபத்தில் இருந்த வாசுவின் முதல் மனைவி சமயம் பார்த்து, கணவனின் கள்ளக்காதலி வீட்டிற்கு உறவினர்களுடன் சென்று இருவரையும் கையும் களவுமாகப் பிடித்து நியாயத்தைக் கேட்டார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பொலிசார் வாசுவையும் அவரது மனைவியையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.