லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட தகவல்!
லிட்ரோ நிறுவனம் இம்மாதத்தில் 33,000 மெற்றிக் தொன் எரிவாயு சிலிண்டர்களாக விநியோகித்ததன் மூலம் எரிவாயு வரிசையை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளதாகவும், நாளொன்றுக்கு கிட்டத்தட்ட ஒரு இலட்சம் சிலிண்டர்களை விநியோகித்து வருவதாகவும் லிட்ரோ காஸ் நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் வி. திரு.கேடேஸ்வரம் இன்று தெரிவித்தார்.
லிட்ரோ நிறுவனம் அனைத்து எரிவாயு விற்பனை முகவர்களுக்கும் எரிவாயுவை விடுவிப்பதாகவும், கொழும்பில் தற்போது எரிவாயு பிரச்சினை இல்லை எனவும் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இந்நிலையில் எரிவாயு பிரச்சினை காரணமாக மூடப்பட்டிருந்த பெரும்பாலான தொழிற்சாலைகள் மற்றும் உணவகங்கள் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த திரு.கேடேஸ்வரம், எரிவாயு விநியோகத்தை தொடர நம்புவதாகவும் குறிப்பிட்டார்.