முல்லைத்தீவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
முல்லைத்தீவில் கடந்த 13 ஆம் திகதியிலிருந்து காணாமல்பொனதாக கூறப்பட்ட இளைஞர் சடலமாக மிட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பு பொன்னம்பலம் வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள தென்னங்காணி ஒன்றில் இன்றையதினம் (16) இருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பொலிஸில் முறைப்பாடு
புதுக்குடியிருப்பு கோம்பாவிலைச் சேர்ந்த 29 வயது இளைஞன் கடந்த 13 ஆம் திகதியிலிருந்து காணவில்லையென கடந்த 15 ஆம் தேதி உறவினர்களால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோம்பாவில் பகுதியைச் சேர்ந்த இராசலிங்கம் சுதர்சன் என்ற 29 வயது இளைஞனே காணாமல் போய் உள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த இளைஞன் இன்று தென்னங்காணி ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கபப்ட்டு வருவதாக தெரிவிக்கபப்டுகின்றது.