வெப்பமும் குளிரும் ஒரே நாளில் ; வானிலை மாற்றம் குறித்து எச்சரிக்கை
இன்று (19) நாட்டில் அதிகூடிய வெப்பநிலை இரத்தினபுரியில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி இரத்தினபுரியில் 32.9°C ஆக வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இதனையடுத்து கட்டுநாயக்க மற்றும் மத்தலயில் வெப்பநிலை 31.2°Cஆக பதிவாகியுள்ளது.

மேலும் நுவரெலியா குறைந்தபட்சமாக 20.2°C வெப்பநிலை பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நாளை பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை அதிகாலை வேளையில் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் உறைபனி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
அத்துடன் நாளை அதிகாலை வேளையில் மேல், சபரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பனிமூட்டமான நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.