நிலவுக்கு உங்கள் பெயரை அனுப்ப ஆசையா? நாசா வழங்கும் அதிரடி வாய்ப்பு!
நாசாவின் மார்ஷல் விண்வெளி ஆய்வு மையம், பொதுமக்களின் பெயர்களை நிலவுக்கு அனுப்பும் #SendYourName எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி விண்ணப்பிக்கப்படும் பெயர்கள் அனைத்தும் ஒரு சிறப்பு SD கார்டில் (SD Card) சேமிக்கப்படவுள்ளது.
இதனையடுத்து இந்த SD கார்ட், நிலவை நோக்கிய வரலாற்று சிறப்புமிக்க பயணத்தை மேற்கொள்ளவுள்ள ஓரியன் (Orion) விண்கலத்தில் வைக்கப்பட்டு விண்வெளிக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நாசா வெளியிட்டுள்ள X பதிவில், ஆர்வமுள்ளவர்கள் இதில் பங்கேற்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
குறிப்பாக குழந்தைகள், அன்புக்குரியவர்கள் மற்றும் செல்லப் பிராணிகள் (Pets) ஆகியோருக்காக பிரத்தியேக "போர்டிங் பாஸ்களை" (Boarding Passes) பெற்றுக்கொள்ளும் வசதியையும் நாசா வழங்கியுள்ளது.
நிலவுக்கு உங்கள் பெயரை அனுப்ப விரும்புவோர் நாசாவின் உத்தியோகபூர்வ இணையதள முகவரியான https://go.nasa.gov/49NQ4mf ஊடாக உங்கள் பெயர்களைப் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.