அசாதாரண வானிலையால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பு
நாட்டில், நிலவிய அதிதீவிர வானிலையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 38 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

எரிபொருள் நிலையங்கள்
வெள்ளத்தினால், நாட்டில் 38 எரிபொருள் நிலையங்கள் சேதமடைந்துள்ளன. அவற்றில் சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் சீர்செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
எனினும், 24 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இன்னும் செயற்படவில்லை என்றும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், அனைத்து எரிபொருள் நிலையங்களும் அடுத்த திங்கட்கிழமைக்குள் முழுமையாக செயற்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி குறிப்பிட்டார்.