மரண வீட்டில் நடந்தேறிய கொடூர சம்பவம் ; சோகத்தில் தவிக்கும் குடும்பம்
மரண வீடொன்றில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (02) இரவு நேரத்தில் சீகிரிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹேன்வலயாகம, கிம்பிஸ்ஸ பகுதியில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
மரண சடங்கில் கலந்து கொள்ள வந்திருந்த நபரை மற்றொரு நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதன் காரணமாக, அவர் படுகாயமடைந்து கிம்பிஸ்ஸ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ஹேன்வலயாகம, கிம்பிஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய நபர் என தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த நபருக்கும் சந்தேக நபருக்கும் இடையில் நீண்ட காலமாக இருந்து வந்த தனிப்பட்ட முரண்பாடு காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக சீகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.