வெள்ளவத்தை பகுதியில் தமிழருக்கு முச்சக்கரவண்டி சாரதி செய்த சம்பவம்!
கொழும்பு வெள்ளவத்தையில் ஆட்டோ ஒன்றில் முக்கிய ஆவணங்களை தமிழர் ஒருவர் தவறவிட்ட நிலையில் அதனை சாரதி ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொழும்பு பம்பலப்பிட்டியிலிருந்து வெள்ளவத்தைக்கு முச்சக்கர வண்டியில் சென்ற குறித்த தமிழர், ஆவணங்களுடன் பணப்பையை முச்சக்கர வண்டியில் தவறவிட்டுள்ளார்.
சம்பவதினத்தன்று வெள்ளவத்தை தொடர்மாடிக் குடியிருப்புகளுக்கு அருகில் தான் போக வேண்டிய இடத்தை அடைந்ததும், பயணி முச்சக்கர வண்டிக்கான கட்டணத்தைச் செலுத்திவிட்டு,சென்றுள்ளார்.
சிறிது நேரத்தின் பின்னர், தனது சட்டைப்பையைப் பார்த்தபோதே, பணப்பை காணாமல் போயிருந்ததை அவர் உணர்ந்துள்ளார்.
இதுதொடர்பில் வெள்ளவத்தைப் பொலிஸில் முறைப்பாடு செய்யத் தயாரானபோது, அதனைக் கண்டெடுத்த குறித்த முச்சக்கர வண்டி சாரதி , உரியவரைத் தேடிச் சென்று பணம் மற்றும் ஆவணங்களைக் கையளித்துள்ளார்.
கொழும்பில் பயணி ஒருவர் தவறவிட்ட பணப்பையைக் கண்டெடுத்த முச்சக்கர வண்டி சாரதி ஒருவர், அதிலிருந்த பணம், அடையாள அட்டைகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் எதனையும் எடுக்காமல் உரியவரைத் தேடிக் கண்டுபிடித்து மீண்டும் ஒப்படைத்துள்ளார்.
இந்நிலையில, சாரதியின் நேர்மையால் அனைத்தும் மீண்டும் கிடைத்தமையால், மகிழ்ச்சியடைந்த தமிழர், சாரதிக்குப் பணப்பரிசு வழங்க முன் வந்த போது அதனைப் பெற்றுக்கொள்ள குறித்த சாரதி மறுப்பு தெரிவித்துள்ளார்.