பொதுமக்களிடம் சுகாதாரத்துறை விடுத்துள்ள வேண்டுகோள் !
சித்திரை புத்தாண்டு காலத்தில் ஏற்படும் விபத்துக்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ளுமாறு சுகாதாரத்துறையினர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
புத்தாண்டுக் கொண்டாட்டங்களின்போது பட்டாசு மற்றும் வாண வேடிக்கைகளை வெடிக்கும் போது அவதானத்துடன் செயற்படுமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
புத்தாண்டு காலங்களில் விபத்துக்கள் அதிகரிக்கும் சந்தர்ப்பங்கள் உள்ளதால் பெரும்பாலும் சிறுவர்கள் பாதிக்கப்படக்கூடிய நிலைமைகளை தவிர்ப்பதற்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எனவே இது தொடர்பில், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் மது போதையில் பிள்ளைகளுடன் பயணங்களை மேற்கொள்வதை தவிர்க்குமாறும் கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.