தேவேந்திர முனை கொலை சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களின் அதிர்ச்சி வாக்குமூலம்

Sri Lanka Police Sri Lanka Police Investigation Crime Branch Criminal Investigation Department Crime
By Sahana Apr 13, 2025 04:04 PM GMT
Sahana

Sahana

Report

தேவேந்திர முனை ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்தின் தெற்கு நுழைவாயில் முன்பாக, சிங்காசன வீதியில் கடந்த மார்ச் 21 ஆம் திகதி இரவு இடம்பெற்ற இரட்டைக் கொலைக்கு, தேவேந்திரமுனை பெரஹராவின் காவடி நடனத்தின்போது ஏற்பட்ட மோதல் காரணம் என சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆந்திராவில் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ; 8 பேர் பலி

ஆந்திராவில் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ; 8 பேர் பலி

கடந்த மார்ச் 21 ஆம் திகதி இரவு, வேன் ஒன்றில் வந்த குழுவினர், இரண்டு இளைஞர்களை சுட்டுக் கொலை செய்தனர்.

இந்த கொலை சம்பவத்தில் "தெஹிபாலே மல்லி" என்று அழைக்கப்படும் தேவேந்திர முனை பகுதியைச் சேர்ந்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பிரதான சந்தேக நபர்களை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் மனிதப் படுகொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவு தடுத்து வைத்து விசாரணை செய்து வருகிறது.

தேவேந்திர முனை கொலை சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களின் அதிர்ச்சி வாக்குமூலம் | Shocking Connection Devendra Mouni Murder Case

இவர்களில் ஒருவர் கொலையாளிகள் வந்த வாகனத்தின் சாரதியாகவும், மற்றவர் துப்பாக்கிதாரியாவார்.

சாரதி, "தெஹிபாலே மல்லி"யின் உறவினர் என்றும் "தெஹிபாலே மல்லி"யின் படகுகளின் ஆவணப் பணிகளை மேற்கொண்டவர் எனத் தெரியவந்துள்ளது.

விசாரணையின்போது சந்தேக நபர்கள், தம்மை உள்ளடக்கிய நான்கு பேர் இந்த கொலைக்காக வந்ததாகவும், அதில் கொழும்பிலிருந்து வந்த இரண்டு துப்பாக்கிதாரிகளும் அடங்குவதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால், அந்த இரண்டு துப்பாக்கிதாரிகள் தொடர்பில் எந்த தகவலும் தமக்குத் தெரியாது என அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும், இந்த கொலைக்காக எந்த பணமும் பெறவில்லை என்றும், நட்பு உறவின் அடிப்படையில் இந்த சம்பவம் நடந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்ட இளைஞர்களில் ஒருவரான யொமேஷ் நதீஷான், தேவேந்திரமுனை பெரஹரவின் காவடி நடனத்தின்போது "தெஹிபாலே மல்லி"யின் சகோதரரின் உடலில் மோதியதால் ஏற்பட்ட மோதல், பின்னர் பெரிய அளவில் வளர்ந்து இந்த கொலைக்கு வழிவகுத்ததாக சந்தேக நபர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

தேவேந்திர முனை கொலை சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களின் அதிர்ச்சி வாக்குமூலம் | Shocking Connection Devendra Mouni Murder Case

காவடி நடனத்திற்குப் பின்னர், "தெஹிபாலே மல்லி"யின் சகோதரர் வெளிநாடு சென்றுவிட்டதாகவும், அவருக்கும் யொமேஷிற்கும் இடையே தொலைபேசி மூலம் வாக்குவாதம் நடந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

"தெஹிபாலே மல்லி"யின் ஆலோசனையின் பேரில், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட வேன் வாகனம் எரிக்கப்பட்டதாக சந்தேக நபர்கள் தெரிவித்துள்ளனர்.

விசாரணை அதிகாரிகள், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு T-56 ரக துப்பாக்கிகளை கண்டுபிடித்துள்ள ​போதும் 9 மி.மீ. வகை துப்பாக்கி இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த ஆயுதங்கள் கொலைக்கு முதல் நாள் தமக்கு வழங்கப்பட்டதாக சந்தேக நபர்கள் கூறியுள்ளனர். "தெஹிபாலே மல்லி"யின் படகுகள் மற்றும் பல்வேறு இடங்களில் மறைந்திருந்த போதிலும், விசாரணைகள் தீவிரமடைந்ததால் தாங்கள் அதிகாரிகளிடம் சரணடைந்ததாக சந்தேக நபர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்ய எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்ய எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்

10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
நன்றி நவிலல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US