8 பில்லியனை எதிர்பார்க்கும் அரசாங்கம்!
வரும் 2023ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் 8 பில்லியன் டொலரை எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இதனை ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துக்கு அப்பால், பலதரப்பு நிறுவனங்களிடமிருந்து அடுத்த ஆண்டு 5 பில்லியன் டொலர் வரை கடனை இலங்கை எதிர்பார்க்கிறது.

மறுசீரமைப்பு
அத்துடன் அரச சொத்துக்களை மறுசீரமைப்பதன் மூலம் அரசாங்கம் 3 பில்லியன் டொலர்களை திரட்ட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை அரச நிறுவனங்கள் சிலவற்றை, மறுசீரமைப்பதில் ஜனாதிபதி ஆர்வமாக உள்ளதாக தெரிவித்த சப்ரி , அதன் மூலம் 2 முதல் 3 பில்லியன் டொலர்களை திரட்ட முடிந்தால், திறைசேரியின் இருப்புக்கள் பலப்படுத்தப்படும் என்றும் கூறினார்.
மூன்று வயது மகன் மீது விழுந்த தந்தை ; இறுதியில் வீட்டிற்குள் நடந்த அசம்பாவிதம் ; பறிபோன பிஞ்சு உயிர்
சுவிஸிலிருந்து நீண்ட காலத்தின் யாழ் வந்தவருக்கு நடத்தப்பட்ட கொடூரத்தால் பரபரப்பு ; பணத்துக்காக இப்படியா?