மூன்று வயது மகன் மீது விழுந்த தந்தை ; இறுதியில் வீட்டிற்குள் நடந்த அசம்பாவிதம் ; பறிபோன பிஞ்சு உயிர்
கம்பளை - நாரண்விட்ட பகுதியில் கூரை இருந்து தவறி விழுந்த தந்தையின் கீழ், சிக்கி மூன்று வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கம்பளை, பிஹில்லதெனிய பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர், வீட்டின் கூரை பகுதியில் இருந்த நீர் குழாயை எடுப்பதற்காக மேலே ஏறியுள்ளார்.

மேலதிக விசாரணை
இதன்போது, தந்தை மேலே ஏறுவதை மூன்று வயது சிறுவன் கீழே நின்று கொண்டிருக்கையில், மாடிப்பகுதியிலிருந்த ஒரு பலகை உடைந்து, தந்தை சிறுவன் மேல் விழுந்ததாக தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, காயமடைந்த தந்தையும் மகனும் கம்பொல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிஸிலிருந்து நீண்ட காலத்தின் யாழ் வந்தவருக்கு நடத்தப்பட்ட கொடூரத்தால் பரபரப்பு ; பணத்துக்காக இப்படியா?
காயமடைந்த தந்தை தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக கம்பொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.