கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பிரெஞ்சு கப்பல்!
பிரானஸ் கடற்படைக் கப்பலான Dupuy de Lôme இன்றைய தினம் (2106-2023) காலை உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை பாரம்பரிய முறைப்படி வரவேற்றதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
Dupuy de Lôme, 102.40m நீளமுள்ள மின்காந்த ஆராய்ச்சிக் கப்பலானது, கமாண்டர் அகஸ்டின் பிளான்செட் தலைமையில் கப்பலில் 107 பேர் கொண்ட குழுவினருடன் துறைமுகத்தை வந்துடைந்துள்ளது.
பிரெஞ்சு கப்பலின் பணியாளர்கள் நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில், இலங்கையில் உள்ள சில சுற்றுலாத் தளங்களுக்குச் செல்வார்கள் எனவும், அதே நேரத்தில் குறித்த கப்பல் செவ்வாய்க்கிழமை (27-06-2023) இலங்கையில் இருந்து புறப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.