ஓய்வுபெற்ற ரஃபேல் நடாலின் ஓயாத சாதனைகள்
கடந்த மாதம் டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரஃபேல் நடால் (Rafael Nadal) குறித்த விபரங்கள் மற்றும் சாதனைகள் சர்வதேச ஊடகங்களில் தொடர்ச்சியாக வெளிவந்தவண்ணம் உள்ளன.
4 வயதான போது டென்னிஸ் மட்டையை கரங்களில் பற்றிய அவர், தனது 15 வது வயதில் டென்னிஸ் போட்டிகளில் தொடர்ச்சியாக பங்கு பற்றி பல வெற்றிகளைப் பெற்றார்.
சர்வதேச தர வரிசையில் முதலாவது நிலையை எட்டிய அவர், தொடர்ச்சியாக 209 வாரங்கள் அந்த சாதனையைத் தக்கவைத்தார்.
ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இரு முறை அவர் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
'களிமண் தரை ஆடுகளத்தின் சக்கரவர்த்தி' என அழைக்கப்பட்ட ரஃபேல் நடால், பிரெஞ் பகிரங்க போட்டிகளில் 14 முறை வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்து முன்னர் எந்த டென்னிஸ் விளையாட்டு வீரரும் பெறாத கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 22 முறை வெற்றி பெற்றார்.
1986 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம் திகதி பிறந்த அவர் பிரெஞ், அவுஸ்திரேலிய, அமெரிக்க மற்றும் விம்பிள்டன் போட்டிகள் பலவற்றின் தமது 38 வது வயது வரை விளையாடி சாதனை புரிந்துள்ளார்.