மலையக புகையிரத சேவையில் ஏற்பட்டுள்ள தாமதம்!
பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த புகையிரதம் , இன்று நண்பகல் 12.15 மணியளவில் ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவ புகையிரத நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி இன்று (16.10.2023) முற்பகல் 10.15 மணியளவில் பயணித்த அதிவேக புகையிரதம் இவ்வாறு தடம் புரண்டதாக புகையிரத நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ரயில் தடம்புரண்டதால் பதுளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த ரயில், பண்டாரவளை புகையிரத நிலையத்திலும், கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த சரக்கு ரயில் ஹப்புத்தளை புகையிரத நிலையத்திலும் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மலையகத்துக்கான புகையிரத போக்குவரத்தில் தாமதம் ஏற்படக்கூடும் எனவும் புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.