யாழில் நிர்வாணமாக மீட்கப்பட்ட சடலம்; சந்தேகநபர்கள் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
யாழ்ப்பாணம் - கல்வியங்காடு பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான சந்தேகநபர்கள் 6 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்றைய தினம் அழைக்கப்பட்டது. இதன்போது, 6 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 24ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
தாக்குதலில் உயிரிழந்த நபர்
யாழ்ப்பாணம் - கல்வியங்காடு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து நேற்று முன்தினம் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டிருந்தது.
உயிரிழந்தவர், கோப்பாய் பகுதியில் உள்ள சிறுமி ஒருவருடன் முறையற்ற விதத்தில் நடத்துக்கொள்ள முற்பட்ட நிலையில் சிறுமியின் உறவினர்களால் தாக்குதலுக்குள்ளான நபர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.