உடலில் ஒளிந்துள்ள கெட்ட கொலஸ்ட்ரால் ஏற்படுத்தும் ஆபத்துக்கள்!
பெரும்பாலும் நமது உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பது எவ்வித அறிகுறிகளையும் வெளிப்படுத்தாது.
அதன் காரணமாக இதனை ஒரு சைலன்ட் கில்லர் என கூறுகின்றார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் 18 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இதய நோய்களால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.

புற்றுநோய், சுவாச நோய் மற்றும் நீரிழிவு நோய்களால் பாதிக்கப்படுவதை காட்டிலும் இதய நோயால் பாதிக்கப்படுபவர்களே அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது.
பொதுவாக கொலஸ்ட்ரால் என்பது ஒருவிதமான மெழுகு போன்ற தன்மையுடன் இருக்கும், இது நமது உடலின் ஆரோக்கியத்திற்கு தேவையான ஒன்றுதான்.
அளவுக்கு மீறினால் ஏற்படும் பிரச்சனைகள்
ஆனால் நமது உடலில் கொலஸ்டராலின் அளவு சரியான அளவில் இருக்க வேண்டும், அளவிற்கு மீறினால் இது பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

அதிகளவு கொலஸ்ட்ரால் இருப்பது மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்றவற்றை ஏற்படுத்துவதற்கு அதிகளவு வாய்ப்புகள் உள்ளது.
எல்லா கொலஸ்ட்ராலும் உடலுக்கு தீங்கை விளைவிக்காது, ஹெச்டிஎல் எனப்படும் நல்ல கொலஸ்ட்ரால் உங்கள் உடலுக்கு நன்மையை அளிக்கும்.
புகைபிடித்தல், நீரிழிவு மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை ஆகியவையும் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பிற்கு காரணமாகும்.

அறிகுறிகளை வெளிப்படுத்தாது
பெரும்பாலும் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பது எவ்வித அறிகுறிகளையும் வெளிப்படுத்தாது.
கொலஸ்ட்ரால் ரத்தத்தில் உள்ள மற்ற பொருட்களுடன் இணைந்து, இதயத் தமனிகளின் உட்புறத்தில் 'பிளேக்' எனப்படும் நிலையை உருவாக்குகிறது.

இது இதயத்தின் தசைகளுக்கு தேவையான ஆக்சிஜனை தடுத்து மாரடைப்பை ஏற்படுத்திவிடுகிறது.
மேலும் மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தில் இதுபோன்ற பிளேக்குகள் ஏற்படுவது மூளைக்கு செல்லும் ஆக்சிஜனை தடுக்கும், இதனால் உடனடியாக பக்கவாதம் ஏற்படும் என்றும் சொல்லப்படுகின்றது.

கெட்ட கொலஸ்ட்ரால் அறிகுறிகள்
வியர்வை, மார்பு வலி, எடை அதிகரிப்பு, பிடிப்புகள் அல்லது வலிப்பு மற்றும் தோல் மஞ்சள் நிறமாக இருப்பது போன்றவையும் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான அறிகுறிகளாகும்.

எனவே, இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் கண்டால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.