புலம்பெயர் தமிழர் முதலீடுகள் மீதான விவாதம் மீண்டும் தீவிரம் ; IBC பாஸ்கரனின் நண்பர்கள் கடும் ஆதங்கம்
புலம்பெயர் தமிழர்களால் தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் தொடர்பில் மீண்டும் விவாதம் மற்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
தமது தாய்நிலம் மற்றும் இன நலன் என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இத்திட்டங்கள் சில சமயங்களில் தென்னிலங்கை புலனாய்வு தரப்புகளின் ஒத்துழைப்புடன் செயல்படுகின்றனவோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக சில தரப்புகள் குற்றம்சாட்டுகின்றன.
இவ்வாறான விமர்சனங்களுக்கு மத்தியில், புலம்பெயர் தமிழ் தொழிலதிபரும் ஐ.பி.சி தமிழ் குழுமத்தின் தலைவருமான கந்தையா பாஸ்கரன் (Baskaran Kandiah) மேற்கொள்ளும் முயற்சிகளும் கவனத்தை பெற்றுள்ளன.
அவரது முயற்சியில் உருவாக்கப்பட்ட றீ(ட்)சா பண்ணைத் திட்டம் தொடர்பிலும் சமூகத்தில் கலந்துரையாடல்கள் மற்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
தமிழர் மரபு, போராட்ட வரலாறு, தியாகங்கள் உள்ளிட்ட அடையாளங்களை வெளிப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து என்ன தவறு இருக்க முடியும் என சில சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த விவகாரம் தற்போது சமூக ஊடகங்களில் பரவலான விவாதத்தையும் கருத்து பரிமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த தகவல்களை உள்ளடக்கிய முழுமையான காணொளியை இங்கு காணலாம்.....