ஜனாதிபதி அனுரவின் முன்னிலையில் புதிய ஆளுநர்கள் இன்று பதவி பிரமாணம்
புதிதாக நியமிக்கப்பட்ட மாகாண ஆளுநர்கள் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் இன்றைய தினம் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டிருந்த ஒன்பது மாகாண ஆளுநர்களும் தற்சமயம் பதவி விலகியுள்ளனர்.
அதன்படி, மத்திய மாகாண ஆளுநர் லலித் யு.கமகே, வடமத்திய மாகாண ஆளுநர் மஹீபால ஹேரத், தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திஸாநாயக்க ஆகியோர் பதவி விலகியுள்ளனர்.
அத்துடன், ஊவா மாகாண ஆளுநர் அனுர விதானகமகே, வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் ஆகியோர் தமது பதவி விலகல் கடிதங்களை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளனர்.
அதேநேரம், மேல் மாகாண ஆளுநர் பதவியிலிருந்துலகுவதாக மார்ஷல் ஒஃப் எயார் ஃபோர்ஸ் ரொஷான் குணதிலக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கு கடிதம்மூலம் நேற்று அறிவித்திருந்தார்.
இந்தநிலையில் இலங்கையின் 9 மாகாணங்களுக்குமான புதிய ஆளுநர்கள் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜனாதிபதி இன்று இரவு 7.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றையும் ஆற்றவுள்ளார்.