அனுராதபுரத்திலுள்ள ஹோட்டல்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!
ஓர் உணவுப் பொதியின் விலை 450 ரூபாவைத் தாண்டியதால், உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அநுராதபுரம் மாவட்ட உணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் கோதுமை மாவில் தயாரிக்கப்படும் உணவுப்பொருட்களின் விலை அதிகமாக உள்ளதால், உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதனால் உணவகங்களைப் பராமரிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர்.
அநுராதபுரம் மாவட்டத்தின் சில பிரதேசங்களில் கோழி இறைச்சி 1600 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதை கண்டுள்ளதாகவும் இதனால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நாட்களில் ஒரு கிலோ கோழி இறைச்சியை கொள்வனவு செய்ய 1600 ரூபாவை செலவழிக்க பொருளாதார சிரமங்கள் உள்ளதாகக் கூறுகின்றனர்.
கோழி இறைச்சிக்கு கட்டுப்பாட்டு விலை தேவை எனவும் சில பகுதிகளில் கோழி இறைச்சி கிலோ 1400 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.