கொழும்பு நீதிவான் நீதிமன்றத்திற்கே பாதுகாப்பில்லை
கொழும்பு, புதுக்கடையில் அமைந்துள்ள நீதிவான் நீதிமன்ற வளாக வழக்கு அறையை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் வாழைத்தோட்டம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த 5ஆம் திகதி இரவு, குறித்த களஞ்சியசாலை யாரோ அல்லது சிலரால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டபோதிலும் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை.
சம்பவம் இடம்பெற்று 11 நாட்களின் பின்னர் மீண்டும் வழக்கு அறை உடைக்கப்பட்டதையடுத்து நேற்று (17) வாழைத்தோட்டம் பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம், வழக்குப் பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்துள்ளார்.
வாழைத்தோட்டம் பொலிஸாரும் குற்றத் தடுப்புப் புலனாய்வுப் பொலிஸாரும் நேற்று சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்ததுடன், அதற்காக பொலிஸ் நாய்களின் உதவியையும் பெற்றுள்ளனர்.