உறங்கிக் கொண்டிருந்த நிலையில் பரிதாபமாக பலியான பச்சிளம் குழந்தை
பூரான் கடிதத்தில் பச்சிளம் குழந்தை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிலாபம், முந்தல் ஆலய சந்தி பிரேதசத்தில் வீடொன்றில் உறங்கிக் கொண்டிருந்த பச்சிளம் குழந்தை ஒன்று பூரான் கடிதத்தில் உறங்கிய நிலையிலேயே குழந்தை இறந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அங்குவில ஆலய சந்தி பகுதியை சேர்ந்த 22 நாட்களேயானா பச்சிளம் குழந்தையொன்றே இவ்வாறு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் நிகழ்ந்த சமயத்தில் குடும்பத்தில் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்துள்ளனர் அதிகாலையில் எழுந்து பார்த்தபோது குழந்தை எவ்வித அசைவுமின்றி, குளிர்ந்த தேகத்துடன் இருந்ததாக பெற்றோர் தெரிவித்தனர்.
இதனையடுத்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது குழந்தை முன்னரே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
மேலும் வீட்டிற்கு சென்று குழந்தை உறங்கிய கட்டிலை பார்த்த தந்தை அதில் பெரிய பூரான் ஒன்றைக் கண்டுள்ளார்.
அதுமட்டுமின்றி உயிரிழந்த குழந்தையின் முதுகில் பூச்சி கடித்த அடையாளம் இருந்ததாகவும் வைத்தியர்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.