பயணியிடம் தகாத வார்த்தையில் பேசிய பேருந்து நடத்துனர்: கோபமடைந்த பயணி
அக்காரைப்பற்றிலிருந்து - யாழ்ப்பாணம் செல்லும் பேருந்தில் Sujic Yogarasa என்ற நபர் இன்றைய தினம் இரவு 9.20 மணிக்கு ஆசனப்பதிவு செய்துள்ளார்.
இதன்போது பெரியகல்லாற்றில் இடை மறித்தும் நிர்காமல் போனதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பதிவு செய்யும் போது தந்திருந்த தொலைபேசி நீண்ட நேரமாக off செய்யப்பட்டிருந்தது. அரை மணிநேரம் கழித்து பயம் காட்டும் வார்த்தைகளால் கவனக்குறைவாக பேருந்து நடத்துனர் அவரிடம் பேசியுள்ளார்.
இதனையடுத்து கவனக்குறைவாக தகாத வார்த்தை பேசும் பேருந்து நடத்துனர் இதற்க்கு பதில் சொல்லியே ஆகவேண்டும். நான் Online இல் செலுத்திய பணம் 1605 /= திரும்ப கிடைக்கப்படாவிட்டால் பேருந்து சம்பந்தப்பட்ட அத்தனை அரச ஊழியர்கள் மீதும் தகுந்த ஆதாரங்களோடு வழக்கு தொடர்வேன் என பாதிக்கப்பட்ட நபர் முகநூலில் குறித்த பதவியை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.




