மணமேடையில் திடீரென மாயமான மணமகன்; மணமகள் எடுத்த அதிரடி முடிவு!
திருமணத்தில் தாலி கட்டும் நேரத்தில் மணவறையின் மணமகன் திடீரென மாயமானதால் மணப்பெண்ணுக்கு மாற்று மணமகனுடன் திருமணம் நடந்துள்ள சம்பவம் ஒன்று தமிழ்நாட்டில் இடம்பெற்றுள்ளது.
கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவருக்கும் சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த பெண்ணிற்கும் தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது.

வரவேற்பு நிகழ்ச்சி
திருமணத்திற்கு முன்தினம் மாலை இடம்பெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் மணமக்கள் கலந்துகொண்டு அனைவரிடத்திலும் ஆசி பெற்றனர்.
அதன் பின்னர் இரவு 12 மணிவரை இருவரும் வரவேற்பு நிகழ்ச்சியில் கல்லந்துண்டிருந்த நிலையில் அதிகாலை யாரிடமும் சொல்லாமல் மண்டபத்தை விட்டு மாப்பிள்ளை வெளியேறிவிட்டார்.
பரபரப்படைந்த வீட்டினர் மாப்பிள்ளையை பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. மணமகள் மற்றும் மணமகளின் பெற்றோர் அவர்களின் உறவினர்கள் உட்பட பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த உற்றார் உறவினர்களும் கவலை அடைந்தனர். பின்னர் மணமகள் மற்றும் அவரின் பெற்றோர் உறவினர்கள் சிதம்பரம் அருகேயுள்ள வேளங்கிபட்டு கிராமத்தில் உள்ள மணமகள் வீட்டார் உறவினர் மகன் இளவரசனை மாற்று மாப்பிள்ளையாக தேர்வு செய்து குறிப்பிட்ட நேரத்தில் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர்.
தொடர்ந்து பெண் வீட்டார் சிதம்பரம் காவல்நிலையத்தில் புகார் அளித்து காவல்துறையினர் முன்னிலையில் திருமணத்திற்கு ஏற்பட்ட செலவுகளைப் பெற்றுக்கொண்டனர்.