வீட்டு வாசலில் இந்த முடிச்சை கட்டினால் போதும் அதிஷ்ட தேவதை வீட்டிற்குள் குடி புகுந்து விடும்!
ஒரு இடத்தில் கெட்டது வந்து குடியேறிவிட்டால் அந்த இடத்தில் இருக்கும் நல்லது தானாக வெளியே சென்று விடும் என்று கூறுவார்கள்.
இதுதான் இயல்பு. எப்போதுமே கெட்டதை எதிர்த்து போராட கூடிய நல்லதை நாம் பூஜித்து கொண்டே இருக்க வேண்டும்.
இதற்காகத்தான் நம்முடைய முன்னோர்கள் வீட்டில் சுவாமி கும்பிட வேண்டும்.கோவிலுக்கு செல்ல வேண்டும். பூஜை புனஸ்காரங்கள் செய்ய வேண்டும். ஹோமங்கள் செய்ய வேண்டும் என்று சொல்லி வைத்துள்ளார்கள்.
பரிகாரம் செய்ய வேண்டிய நாள்
ஒரு வெள்ளிக்கிழமையாக பார்த்து பரிகாரம் செய்ய தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து கொள்ள வேண்டும். வெள்ளிக்கிழமை என்றால் பூஜை அறையே மங்களகரமாக வைத்து கொள்ள வேண்டும்.
நிலை வாசலில் மாட்ட வேண்டிய முடிச்சு:
குலதெய்வத்தை நினைத்து ஒரு மஞ்சள் துணியில் கொஞ்சமாக புனுகு தடவி விட வேண்டும். அதில் ஒரு துண்டு பச்சை கற்பூரம், 2 ஏலக்காய், சிறிதளவு சோம்பு, வைத்து முடிச்சாக கட்டி இதை அப்படியே நிலை வாசலில் கட்டி தொங்க விட வேண்டும். நிலை வாசலுக்கு வெளிப்பக்கமும் இதை கட்டலாம். நிலை வாசலுக்கு உள்பக்கமும் இதை கட்டலாம்.
நிலை வாசலின் வலது பக்கத்தில் இந்த முடிச்சை கட்டுவது இன்னும் சிறப்பான பலனை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முடிச்சுக்களில் இருந்து வெளிவரக்கூடிய நல்ல வாசனை வீட்டிற்குள் எந்த ஒரு கெட்ட சக்தியையும் நுழைய விடாது. காற்றின் மூலமாக கூட வீட்டிற்குள் எந்த தவறும் நுழைந்து விடாது.
நன்மைகள்
கண் திருஷ்டி கொண்டவர்கள், பொறாமை குணம் கொண்டவர்கள் எல்லாம் வீட்டிற்குள் நுழைந்தாலும் அவர்களுடன் இருக்கும் தீய எண்ணத்தை அப்படியே இந்த முடிச்சிக்குள் இருக்கக்கூடிய பொருட்டுக்கள் ஈர்த்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமும் விளக்கு ஏற்றும் போது இந்த முடிச்சுக்கு ஊதுபத்தி காண்பித்தால் மட்டும் போதும்.இந்த முடிச்சிலிருந்து வெளி வரக்கூடிய வாசம் எப்போது குறைகிறதோ, அப்போது இந்த முடிச்சை மாற்றினால் மட்டும் போதும்.
இந்த முடிச்சை கட்டிய உடனே வீட்டிற்குள் ஒரு தெய்வ கடாட்சம், லட்சுமி கடாட்சம் நுழைந்து விடும்.