சமையல் அறையிலிருந்து வந்த வித்தியாசமான வாசம்: பற்றியெரிந்த அடுப்பு
திருகோணமலை பகுதியில் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் ஒன்று பாதிவாகியுள்ளது.
இச்சம்பவம் புத்தாண்டு அன்று நேற்று (0-01-2022) இரவு 7.00 மணியளவில் திருகோணமலை – தம்பலகாமம், பாலம் போட்டாறு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தின் போது, வீட்டில் உள்ள எவருக்கும் ஆபத்து ஏற்படவில்லை. இரவு சாப்பாட்டை சாப்பிடுவதற்காக கறியை சூடாக்கிக் கொண்டிருக்கும் போதே அடுப்பு வெடித்தாகத் தெரிவிக்கின்றனர் .
மேலும், எரிவாயு சிலிண்டர் கொள்வனவு செய்து 22 நாட்களே ஆகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து , வீட்டில் கறி சுட வைக்கும் போது வித்தியாசமான வாசம் வீசியதாகவும் உடனடியாக குசினிக்குள் சென்று பார்க்கின்ற போது அடுப்பு வெடித்து தீப்பற்றி எரிந்தது.
இந்நிலையில், உடனடியாக தண்ணீர் ஊற்றி அனைத்ததோடு சிலிண்டரிலில் உள்ள குழாயையும் கழற்றி வீசியதாக பாதிக்கபட்டவர்கள் தெரிவித்தனர்.