காகத்தினால் பற்றி எரிந்த மூன்று வீடுகள்!
இந்தியா - ஆந்திராவில் காகம் ஒன்றினால் மூன்று வீடுகள் எரிந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஒரு வீடும் வீட்டுக்கு அருகில் இருந்த மூன்று குடிசைகளும் முற்றாக எரிந்து தீக்கிரையாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பணம் மற்றும் தங்க நகைகள் தீக்கிரை
தீ விபத்து தொடர்பில் காவல்துறையினர் தெரிவித்ததாவது, தீவிபத்து ஏற்பட்ட வீட்டில் விளக்கேற்றி அதை வீட்டின் மேற்தளத்தில் வைத்ததாகவும், அந்த விளக்கில் மேல் பகுதியில் தூக்கிச் செல்லும் வகையில் கம்பி இருந்ததாகவும், அந்த விளக்கை காகம் ஒன்று தூக்கி செல்லும் போது அந்த வீட்டின் மீது வீழ்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் குறித்த வீடு மற்றும் 3 குடிசைகளும் தீப்பிடித்து எரிந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தினர்.
சம்பவத்தில் குத்தகை விவசாயி ஒருவரின் வீடு தீக்கிரையாகியுள்ளதாகவும், கடனாக வாங்கி வைத்திருந்த 1இலட்சம் ரூபாய் பணம் மற்றும் தங்க நகைகள் என்பன தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.